சென்னை-சிங்கப்பூர் இடையே திட்டமிட்டபடி விமான சேவை வழங்கும் “இண்டிகோ”

Photo: IndiGO Official Twitter Page

புதிய ‘Omicron’ தொற்று அச்சத்தின் மத்தியில், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண திட்டத்தின் (VTL) கீழ் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகள் நேற்று திங்கள்கிழமை தொடங்கியது.

புதிய தொற்று அச்சத்தின் காரணமாக சிங்கப்பூர் சில நாடுகளுடன் இதேபோன்ற பயண ஏற்பாடுகளை ஒத்திவைத்துள்ளது.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கடுமையாகும் சோதனை – டிசம்பர் 3 முதல் புதிய நடைமுறை

சென்னை-சிங்கப்பூர் இடையே விமானத்தை திட்டமிட்டபடி இயக்குகிறோம் என்பதை உறுதியுடன் இண்டிகோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த வாரம், நவம்பர் 29 முதல் இந்தியாவிற்கு செல்லும்\ இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் மீண்டும் தொடங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்தது.

இந்த சேவைகள் குறித்து திங்களன்று விமான நிறுவனத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் வரவில்லை.

நவம்பர் 29 முதல் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் Airbus A320neo/A321neo விமானங்களை வாரத்திற்கு ஐந்து முறை இயக்குவதாக விஸ்தாரா கடந்த வாரம் கூறியது.

இந்தியா-சிங்கப்பூர் விமான சேவை: Omicron அச்சத்தின் மத்தியில் விமானங்களை இயக்கத் தொடங்கிய “விஸ்தாரா”