MRT ரயில் இருக்கையில் கோழி எலும்புகள், பயன்படுத்தப்பட்ட காகிதம்… இணையவாசிகள் காட்டம்!

Chicken bones, used tissue paper found on reserved MRT seat
Chicken bones, used tissue paper found on reserved MRT seat (PHOTO: Complaint Singapore/Facebook)

பயணிகள் ரயில்களில் சாப்பிடுவதற்கு தடை செய்யப்பட்டாலும், விதிகள் எப்போதும் பின்பற்றப்படுவது கிடையாது.

முன்பதிவு செய்யப்பட்ட MRT ரயில் இருக்கையில் கோழி எலும்புகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட Tissue காகிதம் காணப்பட்டதாக ஊடகங்கள் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளன.

கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது பயங்கரமாக மோதி விபத்து! (காணொளி)

பேஸ்புக் பதிவு

Xiao Xue என்ற பேஸ்புக் பயனர், தானா மேரா (Tanah Merah) MRT நிலைய ரயிலில் (நவம்பர் 27) ஏறிய பின்னர், தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில், சாப்பிட்ட கோழி எலும்புகளை பயணிகள் கண்டுபிடித்தனர்.

அதே போல பயன்படுத்தப்பட்ட காகிதமும் கோழி எலும்புகளுக்கு அருகில் இருந்தது.

“ரயிலில் சாப்பிடுவது கூடாது என்றால், சாப்பிட கூடாது என்று அர்த்தம், உங்களுக்கு புரிகிறதா?!” – என்று அந்த பதிவுக்கு பேஸ்புக் பயனர் எதிர்ப்பு தெரிவித்தார்.

சட்டம்

போக்குவரத்து அமைப்புகள் சட்டத்தின் கீழ், பயணிகள் ரயில்களிலும் MRT நிலையங்களிலும் சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் அனுமதி கிடையாது.

அவ்வாறு கண்டறியப்பட்டால், குற்றவாளிகளுக்கு S$500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் ஒரு உயிரிழப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…