“கோழியை விட மாவு அதிகம்”…கோழி தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஏன் இந்த அநியாயம் – வெறுப்படைந்த தம்பதி

Chicken Couple disappointed
Stomp

சிங்கப்பூரில் கோழி தட்டுப்பாடு நிலவுதாக பரவலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன, இருப்பினும் சில சூப்பர் மார்க்கெட்களில் கூடுதலாக கையிருப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, கோழி கறி ஆர்டர் செய்த தம்பதிக்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது. கோழி தட்டுப்பாடு இருக்கா, இல்லையா? என்று.

கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய குழாயில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழப்பு – தொடரும் சோகம்

தாங்கள் GrabFood இல் ஆர்டர் செய்த சிக்கன் கட்லெட்டில் சிக்கன் எதுவுமே இல்லாததால் அந்த தம்பதி பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த வியாழக்கிழமை (மே 26) அன்று, பிளாக் 684 ஹௌகாங் அவென்யூ 8ல் உள்ள ஹெங் ஹெங் வெஸ்டர்ன் ஃபுட் நிறுவனத்திடமிருந்து அது ஆர்டர் செய்யப்பட்டது.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த உணவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

“இந்த உணவு பெரும் ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்தது. நான் இரண்டு செட் மீன் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்தேன், ஆனால் ஒன்று தான் வந்தது.”

“சிக்கன் கட்லெட் மெல்லியதாக வெட்டப்பட்டு நன்றாக வறுக்கப்பட்டு இருந்தது. அதில் கோழியை விட மாவு அதிகமாக இருந்தது. ஆனால், அதற்கு $27.70 (டெலிவரி கட்டணம் $3.30 உட்பட) விலை வசூலிக்கப்பட்டது” என்று அவர்கள் கூறினர்.

கோழி தட்டுப்பாடு தற்போது ஏற்படவில்லை என்பதையும், சில சூப்பர் மார்க்கெட்களில் கூடுதலாக கையிருப்பு உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இந்த அநியாயத்தை ஸ்டாம்பிடம் பகிந்து கொண்டனர்.

உலகின் மிகப்பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: ஏற்றுமதி கட்டுப்படுத்துவதால் சிங்கப்பூருக்கு பாதிப்பா?