உலகின் மிகப்பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: ஏற்றுமதி கட்டுப்படுத்துவதால் சிங்கப்பூருக்கு பாதிப்பா?

India sugar singapore

இந்தியா சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதாக முடிவு செய்துள்ளதை அடுத்து சிங்கப்பூரில் அதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற கவலை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் உள்ள நுகர்வோர் சர்க்கரை விநியோகத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

இந்தியா ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியை கொண்டுள்ள நாடு மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இருக்கிறது இந்தியா.

அதே வேளையில், இந்தியா நாட்டிலிருந்து குறைந்தபட்ச அளைவையே சிங்கப்பூர் இறக்குமதி செய்கிறது என்று தொழில்துறையினர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.

தாய்லாந்து, மலேசியா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் நிறுவனம் சர்க்கரையை இறக்குமதி செய்கிறது என்று சர்க்கரை உற்பத்தி வணிக நிறுவனமான Cheng Yew Heng இன் இயக்குனர் திரு ஜான் செங் கூறினார்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் சர்க்கரையின் அளவு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

பாஸ்போர்ட் நடவடிக்கைகளை முடிக்காமல் சென்ற 4 பேர்… தடுப்பு காவலில் வைக்கப்பட்ட சோகம்