சிக்கன் பிரியர்களுக்கு செக்.. சிக்கன் ரைஸ் விலை திடீர் உயர்வு – கடைகள் தற்காலிகமாக மூடப்படலாம்!

Chicken
Motherhsip

மலேசியா, ஜூன் 1 முதல் கோழி ஏற்றுமதியை நிறுத்த உள்ளதாக செய்தி வெளியானதையடுத்து, சிங்கப்பூரில் சிக்கன் ரைஸ் விலை விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிங்கப்பூரில் சிக்கன் ரைஸ் விற்பனையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

தொற்று காலத்தில் கஷ்டங்களை சந்தித்த தன் 3,000 ஊழியர்களுக்கு S$1,000 அன்பளிப்பு, சம்பள உயர்வு வழங்கி நன்றி செலுத்திய சிங்கப்பூர் முதலாளி!

ஏற்கனவே சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோழியின் விலை 5.7 சதவீதம் உயர்ந்துள்ளது என ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

கோழி விலை உயர்வு நேரடியாக நுகர்வோருக்கு அதிக விலைக்கு வழிவகுக்கும் என்று சிக்கன் ரைஸ் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்ப்பதாக சில சிக்கன் ரைஸ் கடை உரிமையாளர்கள் கூறியதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கிளமெண்டியில் உயரத்தில் இருந்து விழுந்து இறந்து கிடந்த ஆடவர் – போலீசார் விசாரணை