தொற்று காலத்தில் கஷ்டங்களை சந்தித்த தன் 3,000 ஊழியர்களுக்கு S$1,000 அன்பளிப்பு, சம்பள உயர்வு வழங்கி நன்றி செலுத்திய சிங்கப்பூர் முதலாளி!

putien-salary-increase
Putien website

சமீபத்திய சீனப் புத்தாண்டின் போது தனது 3,000 ஊழியர்களுக்கு S$1,000 Red packet என்னும் சிறப்பு அன்பளிப்பையும், சம்பள உயர்வுகளையும் வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சிங்கப்பூர் முதலாளி ஒருவர்.

54 வயதான ஃபோங் சி சுங் என்ற அவர், Putien நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். சீனாவின் புஜியான் நகரைச் சேர்ந்த இவருக்கு 2008ஆம் ஆண்டு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது.

கிளமெண்டியில் உயரத்தில் இருந்து விழுந்து இறந்து கிடந்த ஆடவர் – போலீசார் விசாரணை

தனது முதல் Putien கடையை 2000ஆம் Kitchener சாலையில் திறந்தார் அவர். அதிலிருந்து தொடங்கி, சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் பல உணவகங்களை திறந்தார் ஃபோங்.

கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தின் காரணமாக, ​​மற்ற நிறுவனங்களை போலவே அவரது நிறுவனமும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

இந்த கடினமான காலங்களில் உதவுவதற்காக சில ஊழியர்கள் தங்கள் முழு போனஸையும் நிறுவனத்துக்காக விட்டு கொடுத்தனர்.

மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில், நிறுவனம் இயல்பு நிலைக்குத் திரும்பியது, மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் சிரமத்தை சந்தித்த தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க ஃபாங் முடிவு செய்தார்.

இதனால் அவர்களுக்கு S$1,000 Red packet என்னும் சிறப்பு அன்பளிப்பையும், சம்பள உயர்வுகளையும் வழங்கி தனது நன்றையை தெரிவித்தார் ஃபோங்.

திருவனந்தபுரம், சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!