இந்திய குடியரசுத் தலைவருடன் சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திப்பு!

Photo: President Of India Official Twitter Page

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக, சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் (Chief Justice of Singapore Sundaresh Menon) இந்தியா வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 3- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் அவர் பங்கேற்றார். அத்துடன், வழக்கு விசாரணையையும் கவனித்தார்.

வானத்தில் பறந்த சில நொடிகளில் தீ விபத்து… அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!

பின்னர், இந்திய உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 73- வது ஆண்டு நிறைவையொட்டி, உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று நடைபெற்ற ‘மாறும் உலகில் நீதித்துறையின் பங்கு’ (Role of judiciary in a changing world) என்ற தலைப்பிலான கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக அவர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு உயரதிகாரிகள், பார் கவுன்சில் அசோசியேசன் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!! தைப்பூசத்தை முன்னிட்டு இந்து அறக்கட்டளையின் முக்கிய அறிவிப்பு..

அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் உடனிருந்தார்.

கடந்த 2012- ஆம் ஆண்டு சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் நான்காவது தலைமை நீதிபதியாக சுந்தரேஷ் மேனன் பதவியேற்றுக் கொண்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.