போதைப்பொருட்கள் இருந்த இடத்தில் அழுது கொண்டிருந்த கைக்குழந்தை..அதிகாரி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்.!

Childrens found illegal location
Pic: CNB

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நாடு முழுவதும் மேற்கொண்ட 4 நாள் சோதனை நடவடிக்கையில், சுமார் 104 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை மாதம் 12ம் தேதி முதல் நேற்று ஜூலை 16ம் தேதி வரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டனர்.

சிங்கப்பூரில் சுமார் 1,98,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.!

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனைபோது, போதைப்பொருள் புழக்கம் இடம்பெறுவதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் அதிகாரிகளில் ஒருவர் மூன்று இளம் பிள்ளைகளைக் கண்டுபிடித்ததாக அமைச்சர் சண்முகம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார்.

அந்த மூன்று இளம் பிள்ளைகளில், 10 மாத கைக்குழந்தையும் ஒன்று. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது, அந்த 10 மாத கைக்குழந்தை அழுதுகொண்டு இருந்தது.

அதனை கண்ட அந்த அதிகாரி உடனே அழுத அந்த குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, அடுத்த கையில் அந்த குழந்தைக்காக பாலை காய்ச்சி அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு பாலை ஊட்டினார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான தனக்கு அழுகின்ற பச்சிளம் குழந்தையின் பசி புரியும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

பிள்ளைப்பருவத்தில் யாருக்கும் அந்நிலை ஏற்படக்கூடாது எனக் கவலை தெரிவித்த அமைச்சர் சண்முகம், போதைப்புழக்கத்தால் ஒரு பாவமும் அறியாத பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார்.

கண்டுபிடிக்கப்பட்ட பிள்ளைகள் அவர்களது உறவினர்களுடன் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும், போதைப்புழக்கத்தால் அதை பயன்படுத்தும் நபர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர் என சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டவர்களுக்கு நற்செய்தி.!