வெளிநாட்டில் தடுப்பூசி போட்டவர்களுக்கு நற்செய்தி.!

(photo: Unsplash)

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை உடையோர் வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், சிங்கப்பூரில் தங்களது தடுப்பூசி ஆவணங்களில், அதனை பதிவு செய்து கொள்ளலாம்.

மாடர்னா, ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொண்டோர், சிங்கப்பூர் திரும்பியதும் அவ்விவரத்தை சிங்கப்பூர் தடுப்பூசி பதிவகத்தில் பதிவேற்றலாம். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றும் அவசியம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், அவர்களின் சிராலஜி சோதனையின் முடிவுகள் வைத்தும் அவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனரா என்பதை அறியலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை பதிவிட விரும்புவோர் தனியார் சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநரையும் நாடலாம் என குறிப்பிட்டுள்ளது.

சாட்டா, ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம், மின்மெட், மேக் ஹெல்த் கன்னெக்ட்(MHC ) ஆகியவை இச்சேவையை வழங்கி வருகின்றன. அதற்கான கட்டணத்தை மருந்தகங்களே நிர்ணயித்துக்கொள்ளும் மேலும், அரசாங்கம் எந்த கட்டணக்கழிவும் வழங்காது.