சீனப் புத்தாண்டையொட்டி, ‘MyIndia’ வழங்கும் அதிரடி ஆஃபர்!

Photo: MyIndia.sg

சிங்கப்பூரில் உள்ள ஆன்லைன் எனப்படும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது ‘MyIndia’. இந்த நிறுவனம், ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் காரம், இனிப்பு வகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இப்பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ‘MyIndia’ நிறுவனம் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

“சீனர்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் தான்” – சீனப் புத்தாண்டை அலங்காரங்களுடன் கொண்டாடும் இந்திய குடும்பம்!

குறிப்பாக, சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த நிறுவனத்தில் கிடைக்கும் என்பதால், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகளையும் ‘MyIndia’ நிறுவனம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், வரும் பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று சீனப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘MyIndia’ தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃப்பரை வழங்கியுள்ளது. அதன்படி, தங்களது சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘BUY NOW, PAY LATER’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, ‘Bill’- ல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் செலுத்தினால் போதும். மீதம் செலுத்த வேண்டிய தொகையானது இரண்டு தவணைகளாக செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் தரும் வங்கி தகவல்களின் அடிப்படையில் மாதந்தோறும் பணம் ‘Automatic’ ஆக எடுத்துக் கொள்ளப்படும். தவணைதொகைக்கு வாடிக்கையாளர்களிடம் வட்டி எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. கிட்டத்தட்ட இத்திட்டம் ‘EMI’ போன்றது என்றாலும், வட்டி 0% ஆகும்.

தொழிற்துறை கட்டிடத்தில் வரி செலுத்தப்படாத 500 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் பறிமுதல் – இருவர் சிக்கினர்

அதேபோல், இன்று (26/01/2022) இந்தியாவின் குடியரசுத் தினத்தை என்பதால், அதனை மக்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது ‘MyIndia’. குறைந்த பட்சம் 60 சிங்கப்பூர் டாலருக்கு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 20 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள 5 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இச்சலுகை ஜனவரி 20- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘MyIndia’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி சேவையையும் வழங்கி வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://myindia.sg/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 73- வது குடியரசுத் தினம்- சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாட்டம்!

‘MyIndia’ பல்வேறு பொதுச் சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு இலவச உணவுகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து யூ-டியூப் வலைத்தளத்திற்கு சென்று My India Charity என்று குறிப்பிட்டு, வீடியோ மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.