சீன புத்தாண்டையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ந்த முதியவர்கள்!

சீன புத்தாண்டையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ந்த முதியவர்கள்!
Photo: HEB

சீன புத்தாண்டையொட்டி, சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) சமீபத்தில் விருந்துடன் கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்தில் சைனா டவுன் (Chinatown) பகுதியைச் சேர்ந்த 100 குடியிருப்பாளர்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியவர்கள் (Seniors) கலந்து கொண்டனர்.

சீன புத்தாண்டையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ந்த முதியவர்கள்!
Photo: heb

சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியருக்கு சிறை – தன் கடமையை தவறியதாக குற்றம் நிரூபணம்

அவர்களுக்கு தன்னார்வலர்களால் தயாரிக்கப்பட்ட ஆடம்பரமான சைவ சீன உணவுத் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது. அதனை இன்ப முகத்துடன் பெற்றுக் கொண்டு முதியவர்கள் உணவருந்தி மகிழ்ந்தனர். அத்துடன், சிங்க நடன நிகழ்ச்சியும், சீனா, மலாய் மற்றும் தமிழ் ஹிட் பாடல்களையும் உள்ளூர் பாடகர்கள் பாடி முதியவர்களை மகிழ்வித்தனர்.

சீன புத்தாண்டையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ந்த முதியவர்கள்!
Photo: HEB

பின்னர் அனைவருக்கும் சீன புத்தாண்டு பரிசு பைகளும் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளைக் கண்டு முதியவர்கள் மகிழ்ந்ததுடன், கலைஞர்களையும் உற்சாகப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, தன்னார்வலர்கள், முதியவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.

‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மாசி மாத விநாயகர் சதுர்த்தி விழா!- பக்தர்களுக்கு அழைப்பு!

சீன புத்தாண்டையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ந்த முதியவர்கள்!
Photo: HEB

இந்த விருந்து நிகழ்ச்சியானது ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது என்பதும், சீன புத்தாண்டுக்கு முன்னதாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.