சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியருக்கு சிறை – தன் கடமையை தவறியதாக குற்றம் நிரூபணம்

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் தன் கடமையை தவறியதற்காக நான்கு வாரச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

60 வயதான திலகரத்தினம் ராஜரத்தினம் என்ற அவர் இங்குள்ள நிறுவனம் ஒன்றில் இயக்குநரான பணிபுரிந்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியால் வெடித்த போராட்டம் – நிறுவனத்தை கலைத்து செட்டில்மென்ட் செய்ய முடிவு

சிறையோடு சேர்த்து, வரும் ஐந்தாண்டுகளுக்கு அவர் எந்த நிறுவனத்திலும் இயக்குநராக பணியாற்ற தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

ராஜரத்தினம், Strategic கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Strategic) என்ற நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். இவர் மட்டும் தான் அந்நிறுவனத்தின் இயக்குனர்.

அவர் தனது அலுவலகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த புதன்கிழமை அவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் ஐந்தாண்டுகளுக்கு இயக்குநராக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.

“சக ஊழியர்கள் கஷ்டப்பட கூடாது” – இல்லாதவர்களும் சாப்பிட வேண்டும், என நன்கொடை அளித்த வெளிநாட்டு ஊழியர்