“சக ஊழியர்கள் கஷ்டப்பட கூடாது” – இல்லாதவர்களும் சாப்பிட வேண்டும், என நன்கொடை அளித்த வெளிநாட்டு ஊழியர்

-migrant-worker-celebrates-his-certification-donating-meals-others
Screengrabs/TikTok/Krsnasfreemeal

தன் வருமானம் தன்னுடைய குடும்பத்துக்கு மட்டும் இல்லாமல் சமூகத்தில் இருக்கும் இல்லாதவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என உதவி செய்யும் உள்ளங்கள் சொற்பமே.

அவர்களின் ஒருவர் தேவேந்திரன் சரவணன் என்ற வெளிநாட்டு ஊழியர். இவர் Krsna’s Free Meals உணவகத்துக்கு அளித்த நன்கொடையை போற்றும் விதமாக கட்டிட, கட்டுமான ஆணையம் அவருக்கு சான்றிதழ் ஒன்றை வழங்கி சிறப்பித்தது.

சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினல் நீரில் இறந்து கிடந்த ஆடவர் – அருகில் செருப்பு, பீர் கேன் கண்டெடுப்பு

தேவேந்திரனின் இந்த பொதுநல பங்களிப்பை பாராட்டும் விதமாக கடந்த புதன்கிழமை (பிப் 7) அன்று காணொளி ஒன்றை அந்த உணவகம் பகிர்ந்து கொண்டது.

அந்த காணொளியில் தேவேந்திரன் கூறியிருப்பதாவது, “மற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஆசை சில நாட்களாகவே எனக்கு உள்ளது” என்றார்.

தனது சக ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்துகொள்வதாக கூறிய ஊழியர் தேவேந்திரன், தன்னுடைய உதவி மற்றவர்களுக்குப் பயனளிக்கும் என்று நம்புவதாக சொன்னார்.

தனக்கே உணவு தேவை இருக்கும் சூழலில் அவர்களுக்காக இந்த உதவியை செய்வதாகவும் அவர் சொன்னார்.

அவரின் இந்த கருணை உள்ளதை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

PHOTOS: Screengrabs/TikTok/Krsnasfreemeal

அந்த உள்ளூர் தொண்டு நிறுவனமான Krsna’s Free Meals உணவகம் இரண்டு வேளைகளில் இலவசமாக உணவை வழங்குகிறது.

ஒன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி 9.30 மணிக்கு முடிவடைகிறது.

மற்றொன்று மதிய உணவு ஷிப்ட், அது காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 2.30 வரை இருக்கும்.

 

Verified by MonsterInsights