பிரபல நர்சரியில் ஏற்பட்ட தீ: பரிதாபமாக உயிரிழந்த பறவைகள்

Choa Chu Kang fire birds found dead
SCDF

No. 50 சோவா சூ காங் ட்ராக் 14ல் உள்ள பிரபல நர்சரியில் ஏற்பட்ட தீ விபத்தில் கூண்டு பறவைகள் சில பலியாகின.

சோவா சூ காங் வேயில் புதன்கிழமை (ஜூலை 20) இரவு 8 மணிக்கு ஏற்பட்ட தீ தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.

‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு!

அன்று இரவு 7.35 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

பானை செடிகள் வைக்கப்பட்ட வரிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது என்று SCDF கூறியுள்ளது.

இதனை அடுத்து, சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது என்றும் SCDF தெரிவித்துள்ளது.

“தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் கூண்டுக்குள் இருந்த பறவைகள் சில இறந்து கிடந்தன. வேறு காயங்கள் எதுவும் இல்லை.”

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் நுகர்வோருக்கு நன்றி! – வாரி வாரி கோழி இறைச்சியை சிங்கப்பூருக்கு அனுப்பும் இந்தோனேசியா