வெகுநேரம் வெயிட் பண்ணும் பயணிகள்! – கிறிஸ்துமஸ்,புத்தாண்டு விடுமுறை!

Heavier traffic expected singapore-malaysia-land-checkpoints

கிறிஸ்துமஸ்,புத்தாண்டு விடுமுறைகளை முன்னிட்டு, சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாகக் குடிவரவு சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், துவாஸ்,உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகள் வழி பயணம் செய்தோர் எண்ணிக்கை Covid-19 தொற்றுக்கு முன்பு பதிவான நிலையில் 84 சதவீதத்தைத் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சோதனைச்சாவடிகள் வழியாகப் பயணம் செய்திருந்தனர்.

சோதனைச்சாவடிகள் வழியாக ஒவ்வொரு நாளும் சுமார் 359,000 பேர் பயணித்தனர்.விடுமுறைக் காலத்தின்போது சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கக்கூடும்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் BKE விரைவுச்சாலை வரை சென்றது.கடந்த 2019இன் விடுமுறைக் காலத்தின் போது சோதனைச்சாவடிகளில் கார்களில் பயணம் மேற்கொண்டோர் சுமார் 3 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக ஆணையம் குறிப்பிட்டது. இந்தாண்டும் அதே போன்ற போக்குவரத்து நெரிசல் BKE, AYE விரைவுச்சாலைகள் வரை நீடிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.