சிங்கப்பூரில் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்த 19 வயது மாணவி… என்ன நடந்தது?

cinnamon-college
Jane Zhang

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) Cinnamon கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் இறந்து கிடந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரது மரணம் குறித்து குடியிருப்பு கல்லூரியில் வசிக்கும் மாணவர்கள் தகவல் கொடுத்ததை புரிந்துகொள்ள முடிகிறது.

முதல் முறையாக நெல் அறுவடை செய்த சிங்கப்பூர்!

உள் சுற்றறிக்கை

“பிப். 12 அன்று காலை Cinnamon கல்லூரியில் வசிப்பவர் உயிரிழந்ததை அறிந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” என கல்லூரி உள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Cinnamon கல்லூரி வளாக உயரத்தில் இருந்து மாணவி விழுந்துள்ளார் என்றும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காவல்துறைக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

“இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.”

“ஆதரவு மற்றும் உதவியை வழங்க மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் கூறியது:

நேற்று காலை 5:48 மணிக்கு 22 காலேஜ் அவென்யூ ஈஸ்ட்டில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

“19 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்தில் அசைவற்று கிடந்தார் என்றும், பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், எந்த வித சதிச் செயலும் இதில் சந்தேகிக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் பிரம்மாண்ட TOTO டிரா: S$19.4 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்ற 8 வெற்றி டிக்கெட்டுகள்!