சர்க்யூட் சாலை அருகே இறந்து கிடந்த ஆடவர்: “சொந்தம் யாரும் இல்லை” – போலீஸ் விசாரணை

சர்க்யூட் சாலை
Google Maps

சர்க்யூட் சாலையில் உள்ள வீட்டில் 56 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (நவ.18) சர்க்யூட் ரோட்டில் உள்ள பிளாக் 43ல் உள்ள ஆடவர் அவர் வீட்டில் இறந்ததாக போலீசார் குறிப்பிட்டனர்.

மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை

அவரை இரண்டு வாரங்களாகக் காணவில்லை என்றும், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

அவர் இறந்ததை உறுதி செய்த போலீசார், இது ஒரு இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தினர்.

அவர் தனியாக வாழ்ந்து வந்ததாகவும், யாரும் அவரை பார்க்க வரமாட்டார்கள் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறினர்.

விசாரணைகள் தொடர்கின்றன.

சோதனையில் சிக்கிய 3 ஆடவர்கள் – தப்பிக்க முயன்றவரை வளைத்து பிடித்து அதிகாரிகள்