சோதனையில் சிக்கிய 3 ஆடவர்கள் – தப்பிக்க முயன்றவரை வளைத்து பிடித்து அதிகாரிகள்

Singapore today news Tamil
ICA/Facebook

Singapore today news Tamil: தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று முயற்சிகளை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) முறியடித்துள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் ஒரே நாளில் கடந்த முயன்ற 1,000 பாக்கெட் சிகரெட்களை ICA கைப்பற்றியது.

மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை

மூன்று மோட்டார் சைக்கிள்களை வழக்கமான ஸ்கேன் செய்த போது அதில் சில முரண்பாடுகளை அதிகாரிகள் கவனித்தனர்.

இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், மோட்டார் சைக்கிள்களின் பல்வேறு பாகங்களில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட சிகரெட்டுகளை கண்டறிந்தனர்.

முதல் மோட்டார் சைக்கிளில் இருந்து 220 சிகரெட்டுகள், இரண்டாவது வண்டியில் 380 மற்றும் மூன்றாவது வண்டியில் 400 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் ஒருவர் தப்பி ஓடியதாகவும், பின்னர் அதிகாரிகள் துரத்திச் சென்று அவரைப் பிடித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சுங்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களே ரெடியா.. இந்தியா vs ஆஸி. இறுதி போட்டியை பெரிய திரையில் காண அரிய வாய்ப்பு – என்ன செய்ய வேண்டும்?

Verified by MonsterInsights