சிறுமியிடம் சில்மிஷ சேட்டை செய்து சிக்கிய ஊழியர் – கைது செய்த போலீஸ்

cleaner arrested
Stomp

சோவா சூ காங்கில் 10 வயதுமிக்க சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 5) காலை 9 மணியளவில், பிளாக் 803 கீயட் ஹாங் க்ளோஸின் படாலிங் காபிஷாப்பில் (Badaling Coffeeshop) இந்த சம்பவம் நடந்ததாக ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார்.

ஓட்டுநர் உரிமம் இல்லை.. முதலாளிக்கு தெரியாமல் காரை ஓட்டி வந்து விளக்கு கம்பத்தில் மோதியவர் கைது

ஊழியர் காபி ஷாப்பில் கிளீனராக வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் தயார் கூறியதாவது; அந்த வக்கிர புத்தி கொண்ட ஆடவர் சிறுமியை அவரின் வீட்டிற்கு அழைத்தார், அதனை மறுத்ததால் சிறுமி மீது ஆடவர்  கை வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஊழியர் சிறுமியின் மறைவிடங்களில் கைவைத்ததாகவும் அவரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

பயத்தில் திகைத்த சிறுமி உடனே தாயாரிடம் வந்து சொல்ல, அவர் போலீசை அழைத்தார்.

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அன்று மதியம் 12.49 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் பாதிக்கப்படும் 32 பேருந்து சேவைகள்; ஏன்..?