புதர்களுக்குள் கிடந்த சடலம்…துப்புரவு ஊழியர் கொடுத்த புகார் – விசாரணை நடத்தி வரும் போலீஸ்!

Cleaner finds man, 83, dead among bushes along busy CTE
Shin Min Daily News

சிங்கப்பூர் மத்திய அதிவிரைவுச் சாலையில் (CTE) துப்புரவு ஊழியர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) காலை சாலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ​​​​புதர்களுக்கு இடையில் 83 வயதுமிக்க முதியவர் ஒருவரின் சடலம் கிடப்பதை ஊழியர் எதிர்பாராத விதமாக கண்டார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – இதுபோன்ற தவறிழைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்!

இதை கண்டு அதிர்ச்சியடைந்த துப்புரவு ஊழியர் உடனடியாக போலீசாருக்கு இதுப்பற்றி தகவல் தெரிவித்தார்.

பின்னர் வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றினர். அந்த முதியவர் அருகில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.

பிளாக் 472, ஆங் மோ கியோ அவென்யூ 10 க்கு அருகில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

​​கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.25 மணியளவில் இயற்கைக்கு மாறான அந்த மரணம் குறித்து தகவல் கிடைத்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, முதியவர் அசையாமல் காணப்பட்டார் என்றும், பின்னர் இறந்தது உறுதி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் சதிச்செயல் குறித்து சந்தேகிக்கவில்லை.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!