சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – இதுபோன்ற தவறிழைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்!

"சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க" - சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தமிழ்நாட்டு ஊழியர் ஒருவர் விமான நிலையத்தில் கையும் களவுமாக சிக்கினார்.

இண்டிகோ விமானத்தில் இரு தினங்களுக்கு முன்னர் காலை 10.30 மணிக்கு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆம்பலாப்பட்டு ஊரை சேர்ந்த அவர் சிங்கப்பூரில் இருந்து பயணித்து வந்தார்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!

இதனை அடுத்து அதிகாரிகள் அவரை சோதனை செய்ததில் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்து வந்தது கண்டறியப்பட்டது. பின்னர் ஊழியரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

48 வயதான சக்திவேல் என்ற அந்த ஊழியர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரின் சொந்த முகவரி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆம்பலாப்பட்டு.

ஆனால், அவர் சதாசிவம் கலையரசன் (48 வயது) என்ற பெயருடன், தாம் ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு புலவர் காடு முகவரியில் வசித்து வருவதாக பாஸ்போர்ட்டில் போலியாக தகவல்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் பொது இடத்தில் முத்த மழை பொழியும் ஜோடிகள்! இருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்து கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதாம்லே சிங்கப்பூரு கெத்து!