10 ஆண்டுகள் சாதாரண ஊழியராக பணியாற்றிவரை கவுரவித்த நிறுவனம்: S$10,000 மதிப்புள்ள Rolex அன்பளிப்பு

cleaner-got-rolex-watch paradise-group

Rolex Watch: நிறுவனம் ஒன்றில் 10 ஆண்டுகள் துப்புரவு ஊழியராக பணியாற்றியவருக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட உணவக நிறுவனமான பாரடைஸ் குழுமம் (Paradise Group) கடந்த மார்ச் மாதம் நீண்டகாலமாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ரோலக்ஸ் கடிகாரங்களை வழங்கி நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஊழியர்கள் கவனத்திற்கு – இத ஒருபோதும் செய்யாதீங்க

நிறுவனத்தில் உயர் பதவி மற்றும் அடிமட்ட பதவியைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

98 ரோலக்ஸ் வாட்சுகள் இதில் வழங்கப்பட்டன, ஒவ்வொன்றும் சுமார் S$10,000 மதிப்புமிக்கவை.

இதில் அங்கு துப்புரவு வேலை செய்யும் பெண் ஊழியருக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

Tan Ai Tee என்ற பெண் ஊழியரான அவர், அந்நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

67 வயதுமிக்க சிங்கப்பூரரான அவர், தனது வாழ்நாளில் ரோலக்ஸ் கடிகாரத்தை பார்த்தது கூட இல்லையாம். இந்த அன்பளிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன், என்னுடைய வேலையை முதலாளிகளும் நிறுவனமும் அங்கீகரித்தது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது” என்றார்.

“ஒரு பகுதி நேர ஊழியரான நான் ரோலக்ஸ் கடிகாரத்தை அன்பளிப்பாக பெற முடியும் என்று எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் (ST) கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

Singapore TOTO முதல் பரிசு வெற்றியாளர் இல்லை.. 2 ஆம் பரிசுடன் சேர்த்து முதல் பரிசையும் தட்டி சென்ற 12 பேர்