ரயில் நிலைய எஸ்கலேட்டர் படியில் விழுந்த மூவர்.. படி எதிர் திசையில் இயங்கியதா? – BCA விளக்கம்

3 fall while riding escalator at Clementi MRT station no equipment abnormalities
Photo: Michelle Ng

கிளமென்டி ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் படியில் செல்லும் போது விழுந்து மூன்று பேர் காயமடைந்தனர்.

கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையத்தின் (BCA) பொறியாளர்கள் எஸ்கலேட்டரை ஆய்வு செய்ததாகவும், சோதனைகளில் உபகரண செயல்திறன் கோளாறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் கூறினார்.

வீடு உட்பட அனைத்து சொத்தையும் விற்று அனாதைகளுக்கு உதவி வரும் சிங்கப்பூரர் – “இவரால் சிங்கப்பூருக்கு பெருமை”

அதாவது எஸ்கலேட்டர் படியின் இயக்கம் எதிர் திசையில் செயல்பட்டதாக கூறப்பட்ட புகாருக்கு BCA பதிலளித்தது.

மேலும் இந்த சம்பவத்தின் CCTV காட்சிகளை சோதித்தபோதும், எஸ்கலேட்டர் எதிர் திசையில் செயல்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

காலை 9.30 மணியளவில் 3150 காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

இதில் மூன்று பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அது கூறியது.

மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்.. பின்னர் இறந்தது உறுதி – 43 வயது ஆடவர் விசாரணையில்