மூடப்பட்டிருந்த காப்பிக் கடையில் திடீர் தீ விபத்து!

Tanjong Pagar Plaza
Photo: SCDF

 

சிங்கப்பூரில் உள்ள 260 கிம் கீட் அவென்யூவில் (260, Kim Keat Avenue)முதல் மாடியில் (First Floor) இருந்த மூடப்பட்டிருந்த காப்பி கடையில் நேற்று (ஜூன் 16) இரவு 11.15 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

“இந்தியாவில் மேலும் ஒரு நகரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை… பயணக் கட்டணம் இவ்வளவு தான்”- இண்டிகோ ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!

இதையடுத்து, பிஷன் தீயணைப்பு நிலையத்தை (Bishan Fire Station) சேர்ந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தீயணைப்பு வீரர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து, காப்பிக் கடையில் தீக் கொழுந்து விட்டு எரிந்ததைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள், மூடப்பட்டிருந்த கடையை உடைத்து, பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துக் கொண்டு உள்ளே சென்ற வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.

எனினும், அந்த கடையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டிட விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியருக்கு சிங்கப்பூர் அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல்!

இதனிடையே, காப்பிக் கடைக்கு எதிரே இருந்த மற்றொரு காப்பிக் கடையில் இருந்த ஏழு பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.