சிங்கப்பூர் அமைச்சர்களை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- பயணத் திட்டம் குறித்த விரிவான தகவல்!
Photo: TN Govt

 

தமிழகத்திற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024- ல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் 9 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று (மே 23) சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அந்த வகையில், இன்று (மே 23) காலை 10.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு புறப்பட்டார். அவருடன் அரசு உயரதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியைத் திருத்திக் கொள்ளும் வசதி அறிமுகம்!

இன்று (மே 23) பிற்பகல் சிங்கப்பூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரின் போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். மேலும், முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்ட்மெண்ட் அதிபர்கள் முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்.

இதில் தொழில் முதலீடுகள் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகளும் கையெழுத்தாக உள்ளது.