குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி சந்தேக நபருக்கு அடி; அதிகாரி வெங்கடேஷ் சஸ்பென்ட்.!

Pic: TODAY

சிங்கப்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி பிற்பகலில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்த சிவபாலனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிவபாலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பெட்டிக்குள் இருந்த நீல பொட்டலத்தில் போதைப்பொருள் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உட்லண்ட்ஸ் குழுவிடம் சிவபாலன் ஒப்படைக்கப்பட்டார். தமது மோட்டார் சைக்கிள் பெட்டிக்குள் போதைப்பொருள் இருப்பது தமக்குத் தெரியாது எனவும், தமது நண்பரிடம் மோட்டார் சைக்கிளைக் கொடுத்திருந்ததாகவும் சிவபாலன் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்ட சிவபாலனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 13 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. மலேசிய நாட்டவரான சிவபாலன் கன்னியப்பன் என்பவரிடமிருந்து போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி வெங்கடேஷ் என்ற அதிகாரி அவரை அடித்துத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?

சிவபாலனிடம் தமிழில் விசாரணை நடத்த CNB அதிகாரி வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். சிவபாலனிடம் வெங்கடேஷ் முதலில் கனிவுடன் பேசியதாகவும், ஆனால் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பாக சிவபாலன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வெங்கடேஷ் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

சிவபாலனை மருத்துவ பரிசோதனை செய்துபார்த்த போது, அவருக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்தது. சிவபாலனை அதிகாரி மூன்று முறை அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வெங்கடேஷ் அடித்துத் துன்புறுத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வெங்கடேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி சந்தேக நபரை CNB அதிகாரி வெங்கடேஷ் அடித்துத் துன்புறுத்தியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் வெங்கடேஷ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிவபாலனிடம் கடுமையாக நடந்துகொண்ட போதிலும் அவரை வெங்கடேஷ் அவரை அடிக்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரியான வெங்கடேஷுக்கு எதிராக அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீதான மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன.

சிங்கப்பூர், திருப்பதி இடையே இண்டிகோவின் ‘VTL’ விமான சேவை!