சிங்கப்பூரில் வெளியானது ‘காபி வித் காதல்’ திரைப்படம்!

Photo: Actor Jiiva Official Twitter Page

பிரபல திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் மற்றும் நடிகைகள் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’.

இந்தப் பெண்ணின் வைராக்கியத்தைப் பாருங்க! வீடியோ வைரல் – சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் இந்தியாவில் நடத்தும் வீதிக்கடை!

மேலும், இவர்களுடன் யோகி பாபு, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தை நடிகை குஷ்புவின் ‘அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த நிலையில், ‘காபி வித் காதல்’ திரைப்படம் நேற்று (04/11/2022) உலகம் முழுவதும் வெளியானது. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியானது. இதில் சிங்கப்பூரில் CARNIVAL CINEMA GOLDEN MILE TOWER, CATHAY AMK HUB, CATHAY CAUSEWAY POINT, CATHAY JEM ஆகிய திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வடகொரியாவுக்கு உதவி செய்த சிங்கப்பூரர்! – வலைவீசித் தேடும் அமெரிக்கா;தகவல் கூறினால் குவியும் டாலர்கள்!

திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ‘தியாகி பாய்ஸ்’ வீடியோ பாடல் யூடியூப்- ல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.