‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

மிகக் குறைந்தக் கட்டணத்தில் சர்வதேச விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் 17 வயது சிறுமியை 11 நாட்களாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!

குறிப்பாக, கோவை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ஸ்கூட் நிறுவனம் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இவ்வழித்தடத்தில் மே மாதத்தில்
வாரத்தில் வியாழன்கிழமை, செவ்வாய்க்கிழமையைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவையை வழங்க உள்ளது.

இந்த வழித்தடத்தில் விமான சேவைக்கான மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

” நாங்கள் என்ன பாவம் செய்தோம் ” செல்லப்பிராணிகளின் ஏக்கம் – நாய்கள் போன்ற செல்ல பிராணிகளை கைவிடும் சிங்கப்பூரர்கள்

விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.