கோவை, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை… விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டிக்கெட் முன்பதிவு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (FlyScoot), இந்தியாவின் திருச்சி, கோவை, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது.

Singapore Pools கடையில் லாட்டரி டிக்கெட் வாங்க சென்றபோது வாக்குவாதம்… மரணத்தில் முடிந்த சண்டை

குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் இந்த வழித்தடத்தில் குறைந்தக் கட்டணத்தில் விமான சேவையை ‘ஸ்கூட்’ நிறுவனம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையை ‘ஸ்கூட்’ நிறுவனம் வழங்கி வருகிறது. கோவை தொழில் நகரம் என்பதால் தொழில் ரீதியாக சிங்கப்பூருக்கு பயணம் செய்யும் வணிகர்கள், தொழிலதிபர்களுக்கு இந்த விமான சேவைப் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒருவரை தாக்கும்போது படம்பிடித்த மற்றொரு ஆடவரை தாக்கிய சிவகார்த்திக்குக்கு சிறை

இதனால் கோவை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ‘ஸ்கூட்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.