‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- நவம்பர் முதல் ஜனவரி வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் A320 என்ற விமானத்தை விமான நிறுவனம் இயக்கி வருகிறது.

சிங்கப்பூரிலிருந்து பார்த்தால் சீனக் கடல் தெரியுமாம்! – அவ்ளோ உச்சியில் கட்டப்படும் வீடு!

தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், கோவை மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான நவம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் விடுதலைப் பெற்றதிலிருந்து இதுவரை! – பாலினச் சமத்துவத்தினால் பெண்களின் முன்னேற்றம்

விமான பயண கட்டணம், விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.