‘கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தில் சரக்கு போக்குவரத்து பாதிப்பு’- காரணம் என்ன தெரியுமா?

Wikipedia Photo

தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் விமான நிறுவனங்கள். இதில், குறிப்பாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவையை விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். இதில் சரக்குகளும் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது.

டாக்ஸி, பேருந்து, தனியார் வாடகை ஓட்டுநர்களுக்கு டிஜிட்டல் உரிமங்கள் – இன்று முதல்…

குறிப்பாக, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனம். தினசரி இரவு 07.45 PM மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் ஸ்கூட் (Flyscoot), பின்னர் இரவு 08.45 PM மணிக்கு மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும்.

நாள்தோறும் இந்த பயணிகள் விமானத்தில் சிங்கப்பூருக்கு சரக்குகள் ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. மேலும், சிங்கப்பூரில் இருந்தும் கோவைக்கு சரக்குகள் கொண்டு வரப்படுகின்றனர். இந்த நிலையில், சரக்கு போக்குவரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி, கொச்சி சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில், இந்த விமான நிலையத்தில் சரக்குகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் அதிகம். உதாரணமாக, மற்ற விமான நிலையங்களில் ஒரு கிலோ சரக்குக்கு ரூபாய் 100 வசூலித்தால், இந்த விமான நிலையத்தில் ரூபாய் 140 என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது.

தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட சிசு… யார் செய்தது? – போலீஸ் தேடல்

தற்போது வாரத்திற்கு சுமார் 3 டன் வீதம் சரக்குகள் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கட்டணம் குறைவு என்பதால் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவில் சரக்குகள் கையாளப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கப்படுகின்றனர். எனவே, குறைவான கட்டணத்தில் சரக்குகளை கையாளும் வகையில், புதிய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

“கோவை சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு கையாளும் அளவை அதிகரிக்கும் நோக்கில், விரைவில் அலுவலகத்தைத் திறக்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டப் பின், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாள, தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தில் மாற்றத்தை நிறுவனம் கொண்டு வரும்” என்று கோவை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.