டாக்ஸி, பேருந்து, தனியார் வாடகை ஓட்டுநர்களுக்கு டிஜிட்டல் உரிமங்கள் – இன்று முதல்…

Photo: SMRT Buses Wikipedia

சிங்பாஸ் (Singpass) கைபேசி செயலியில் டிஜிட்டல் vocational பயிற்சி உரிமங்களை ஏப். 1 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள உரிமங்கள்

  • டாக்ஸி ஓட்டுநர் Vocational உரிமம்
  • பேருந்து ஓட்டுநர் Vocational உரிமம்
  • தனியார் வாடகை கார் ஓட்டுநர் Vocational உரிமம்
  • பேருந்து துணை பணியாளரின் Vocational உரிமம்
  • ஆம்னிபஸ் Vocational உரிமம்

நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அரசு தொழில்நுட்ப முகமையுடன் (GovTech) இணைந்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு அதிக வசதியை ஏற்படுத்தி கொடுப்பதே டிஜிட்டல் உரிமங்கள் அறிமுகம் செய்வதன் நோக்கம் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் பல சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.

சிங்கப்பூரில் பணிபுரியும் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய விதி