“கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்”- ஸ்கூட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்த வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட சாதனங்கள் விற்பனை: 17 பேர் கைது

கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம், கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூபாய் 9,167.04 என்ற விமானக் கட்டணத்தில் பயணிகள் பயணிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்த வழித்தடத்தில், ஸ்கூட் விமான நிறுவனத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo: Flyscoot Official Website

சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்!

இந்த வழித்தட விமான சேவை குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.