‘கோயம்புத்தூர், சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- பிப்ரவரி மாதத்திற்கான பயண அட்டவணை!

Singapore Airlines Scoot expand service
Photo: Scoot Airlines

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot Airline) , இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை இரு மார்க்கத்திலும் வழங்கி வருகிறது ஸ்கூட் விமான நிறுவனம்.

2.2 மில்லியன் இலவச முகக்கவசங்களை விநியோகம் செய்த டெமாசெக் அறக்கட்டளை!

இந்த நிலையில், கோயம்புத்தூரில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும் விமான சேவை தொடர்பான, வரும் பிப்ரவரி மாதத்திற்கான பயண அட்டவணைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

கோயம்புத்தூர், சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் வரும் பிப்ரவரி மாதம் 2, 4, 6, 9, 11, 13, 16, 18, 20, 23, 25, 27 ஆகிய நாட்களில் விமானம் இயக்கப்படவுள்ளது. இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. விமான சேவை பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.