கோவை, திருச்சியில் சிங்கப்பூருக்கு அதிரடி சலுகை.. கட்டணம் ரூ. 6,500 மட்டுமே – பல்வேறு சிறப்புகளை வழங்கும் Scoot

Scoot offer

Scoot விமான நிறுவனம் கோவையில் இருந்து ரூ. 6,500 சலுகை கட்டணத்தில் விமான சேவையை அறிவித்துள்ளது.

இருப்பினும், குறிப்பிட்ட பகுதிகளுக்கான சலுகை கட்டணம் நாளை செப்.18 ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது.

லைஃப்ஸ்டைல்​, டிராவல் பொருட்களுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி – இப்போதே முந்துங்கள்

ஆனாலும் கூட, 2024 ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் 38 க்கும் மேற்பட்ட இடங்ககளுக்கு சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம் என கூறியுள்ளது.

சென்னை, கோவை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் வெறும் ரூ. 7,000 கட்டணத்தில் சிங்கப்பூர் வரலாம்.

ஸ்கூட் தடையற்ற மற்றும் தனித்துவமான விமான சேவையை வழங்கிவருவதாக கூறியுள்ளது.

அதாவது 30 கிலோ செக்-இன் பேக்கேஜ் அலவன்ஸ், 15 கிலோ கேபின் பேக்கேஜ் அலவன்ஸ், பெரிய- வசதியான இருக்கைகள், தேர்வு செய்த உணவு மற்றும் பானங்கள், இலவச வைஃபை வசதி மேலும் பல வசதிகளை வழங்குவதாக கூறியுள்ளது.

கூடுதல் தகவல்: https://www.flyscoot.com/promotions/in-sep-gotta-scoot

பிறந்தநாளன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த ஊழியர்.. “இரவு உணவுக்காக அப்பா வருவார்” – காத்திருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

Verified by MonsterInsights