சிங்கப்பூரில் அனைத்து டாக்சிகளுக்கான கட்டணங்களையும் தற்காலிகமாக உயர்த்தவுள்ள ComfortDelGro நிறுவனம்!

File Photo Via ComfortDelGro Taxi

சிங்கப்பூரில் ComfortDelGro நிறுவனம் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 4) முதல் அதன் அனைத்து டாக்சிகளுக்கான கட்டணங்களையும் தற்காலிகமாக உயர்த்தவுள்ளது.

சமீபத்திய எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் நிறுவனம் இந்த கட்டண உயர்வை மேற்கொள்ளவுள்ளது.

“நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ”… சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியருக்கு, சிங்கப்பூரருக்கும் கடும் வாக்குவாதம்!

எரிபொருள் தொடர்பான விலை உயர்வு காரணமாக அதன் ஓட்டுநர்கள் இந்த நடவடிக்கைக்கு வலுவான கருத்துக்களை தெரிவித்ததாக டாக்ஸி நிறுவனம் ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மே மாத இறுதிக்குள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், எரிபொருள் விலை குறைந்தால் கட்டணம் திரும்ப பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண தூரம் மற்றும் அதன் காத்திருப்பு நேரத்தை அடிப்படையாக கொண்டு ComfortDelGro நிறுவனம் அதன் கட்டணத்தை 1 காசு உயர்த்தும்.

அறிவிக்கப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் 10 கிலோமீட்டர் பயணத்திற்கான கட்டணங்கள் சுமார் 32 காசுகள் அதிகரிக்கும் என்று ComfortDelGro தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா… “வாரம் 5 விமான சேவை” – குறைந்த கட்டணம் சிறந்த சேவை!