“நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ”… சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியருக்கு, சிங்கப்பூரருக்கும் கடும் வாக்குவாதம்!

foreign worker Man argues MRT
Stomp

சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கும், சிங்கப்பூரர் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதிய வேளையில் நடந்த இந்த சம்பவம், வடக்கு-கிழக்கு பாதையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்… கையில் சுத்தியல், பேனாக் கத்தியுடன் கைது!

வயதான சிங்கப்பூர் ஆடவரும், வெளிநாட்டு ஊழியரும் ஒதுக்கப்பட்ட இருக்கைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரயிலுக்கு வெளியில் இருந்து அந்த ஆடவர் ஊழியரை நோக்கி “நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ” என்றும், “என்னிடம் சத்தம் போட, நீ யாரு?” என்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ரயிலுக்குள் இருக்கும் ஊழியர், அந்த நபரிடம், “Go, go, go” என்று திரும்பத் திரும்பச் சொல்வதையும், “நீங்கள் யார்?” என திருப்பி கேட்க்கிறார்.

அதற்கு அந்த ஆடவர், “நான் சிங்கப்பூரர்” என்று பதிலளித்தார், அதற்கு ஊழியர் “F*** you” என்று சொல்ல வாக்குவாதம் முட்டியது.

இதையே வீடியோ எடுத்தவர் கூறுகையில், “யார் சரியானவர் என எனக்குத் தெரியவில்லை. இருவர் மீதும் தவறு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பொதுப் போக்குவரத்தில் சண்டையிடுவது மிகவும் தேவையற்றது என்று நான் நினைக்கிறேன்.”

ஹௌகாங் காபி கடையில் 15 பேர் பெரும் சண்டை: உலோகக் கம்பி..உடைந்த நாற்காலிகள் – மருத்துவமனையில் ஒருவர்