ஹௌகாங் காபி கடையில் 15 பேர் பெரும் சண்டை: உலோகக் கம்பி..உடைந்த நாற்காலிகள் – மருத்துவமனையில் ஒருவர்

Shin Min Daily New/Facebook

ஹௌகாங்கில் உள்ள காபி கடை ஒன்றில் 15 ஆடவர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில் 40 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிளாக் 106 ஹௌகாங் அவென்யூ 1ல் அமைந்துள்ள 106 Food Alliance காபி கடை அருகே நேற்று முன்தினம் மார்ச் 26 அன்று இரவு சுமார் 10:30 மணியளவில் ரகளை ஏற்பட்டதாக சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் Work permit அனுமதி பெற்ற CMP வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி நீட்டிப்பு!

அதில் இரண்டு அல்லது மூன்று பேர் உலோகக் கம்பிகள் பயன்படுத்தியதாகவும், மேலும் இரண்டு அல்லது மூன்று ஆடவர்களுக்கு காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்த சின் மின் நிருபர், மேசைகள் மற்றும் நாற்காலிகள் தரையில் கிடந்ததையும், இரத்தக்கறை படிந்திருப்பதையும் கண்டார். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அந்த இடத்தில் இல்லை.

அதில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக சிங்கப்பூர் போலீஸ் படை கூறியது.

சிங்கப்பூரில் 20 ஆண்டுகள் கடும் உழைப்பு.. கட்டுமான ஊழியராக வந்தவர், இன்று 7 கடைகளுக்கு முதலாளி – பிரம்மிக்க வைக்கும் தமிழரின் வாழ்க்கை