‘சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!’

Photo: Minister S.Iswaran Official Facebook Page

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலும், கொரோனாவின் திரிபான ஓமிக்ரான் BF.7 பரவலாலும், சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிவிட்டன உலக நாடுகள். அந்த வகையில், ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த புதிய நெறிமுறைகள் ஜனவரி 1- ஆம் தேதி முதல் அமலுக்கும் வந்துள்ளது.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு செல்ல விரும்பும் பயணிகள், விமானத்தில் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டி- பிசிஆர் (RT- PCR) கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என வந்தால், அதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழ்களை ‘ஏர் சுவிதா’ என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றி, பயணியின் சுய விவரத்தைப் பதிவுச் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு பயணிக்கலாம். இந்தியா வந்தவுடன் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. விமானத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: 2023 முதல் அமல் – லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா செக் பண்ணுங்க ?

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ரேண்டம் முறையில் 2% சர்வதேச பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கோள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.