சில ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: 2023 முதல் அமல் – லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா செக் பண்ணுங்க ?

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரில் இந்த 2023ஆம் ஆண்டு முதல் சில ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றும் முன்னர் சொல்லப்பட்டது.

அதன் அடிப்படையில், நுழைவு நிலை (entry-level) கழிவு சேகரிப்பு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியம் படிப்படியாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த படிப்படியான உயர்வு 2028ஆம் ஆண்டில் S$3,260ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த ஆண்டு தெரிவித்தது.

“வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி மரணித்து வரும் நிலையில், இது தேவையா?”

இந்த ஆண்டு 2023 முதல் 2028 வரை, ஊதிய உயர்வுகளின் ஆறு ஆண்டு கால அட்டவணையின் அடிப்படையின், 3,000 கழிவு மேலாண்மை ஊழியர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சகம் கூறியது.

இந்த ஊதிய உயர்வு அட்டவணை ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதன் மறுஆய்வு 2025ல் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க நிலை ஊழியர்களுக்கு எதிர்பார்க்கப்படும் மாதாந்திர அடிப்படை ஊதியம் 2023ஆம் ஆண்டில், S$2,210 இலிருந்து 2028ல் S$3,260 ஆக உயரும், அதாவது 48 சதவீதம் உயரும்.

இதில் கூடுதலாக, ஊழியர்களுக்கு கட்டாய பயிற்சி தேவைகளும் இருக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சீட்டில் கிடந்த 310 கிராம் தங்க செயின் – போட்டது யார் ? விசாரணை