“வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி மரணித்து வரும் நிலையில், இது தேவையா?”

foreign workers ferry Lorry makes dangerous
Stomp

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி ஒன்று பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் முந்திக்கொண்டு கார் பாதையில் செல்லும் வீடியோ பல எதிர்ப்புகளை பெற்றுள்ளது.

ஏற்கனவே ஊழியர்கள் விபத்தில் சிக்கி தொடர்ந்து மரணித்து வரும் நிலையில், இது போன்ற சாகச பயணங்கள் தேவையா என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சீட்டில் கிடந்த 310 கிராம் தங்க செயின் – போட்டது யார் ? விசாரணை

லாரியின் பின்புறம் ஊழியர்கள் யாரும் இல்லை என்றாலும், விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் சிலர் கூறினர்.

முந்திக்கொண்டு செல்லும் லாரியில் மோதிவிடாமல் தவிர்க்க மெர்சிடிஸ் கார் ஓட்டுநர் பிரேக்கை வேகமாக அழுத்தி வேகத்தை குறைப்பதையும் வீடியோவில் காண முடிந்தது.

கடந்த டிச.28 அன்று, ஜூரோங் டவுன் ஹால் சாலையில் அயர் ராஜா அதிவிரைவுச் சாலை சந்திப்பில் Teban மேம்பாலத்தின் கீழ் நடந்த சம்பவத்தின் டாஷ் கேம் வீடியோவை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

விபத்துகளை தவிர்க்க நாம் முதலில் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

சிங்கப்பூர் to இந்தியா… இந்த பகுதிக்கு செல்வோர் கவனத்திற்கு – 7 நாள் தனிமை கட்டாயம்!