ஆட்குறைப்பு பற்றி கட்டாயம் அறிவிக்க வேண்டும்: இதனால் மறு வேலை தேடிக்கொள்ள உதவ முடியும் – MOM

Singapore dormitory rent
Pic: Nuria Ling/TODAY

குறைந்தபட்சம் 10 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், ஏதேனும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் இனி மனிதவள அமைச்சகத்திடம் (MOM) தெரிவிக்க வேண்டும்.

அந்த நடைமுறை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் MOM கூறியுள்ளது.

வேலையிடத்தில் கோவிட் -19 பாதிப்பு கண்டறியப்பட்டால் முதலாளிகள் என்ன செய்ய வேண்டும்? – MOM விளக்கம்

தற்போது, ​​ஆறு மாதங்களுக்குள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும்போது மட்டுமே ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மாற்றத்தின் மூலம், முத்தரப்பு பங்காளிகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள், ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவையும் உதவிகளையும் வழங்க வழிவகை செய்யும் என்று MOM கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர் அல்லது ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வழங்கிய ஐந்து வேலை நாட்களுக்குள் இந்த அறிவிப்பை முதலாளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால், நிறுவனங்களுக்கு S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறைந்தபட்சம் 10 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களை அமைச்சகத்திடம் தானாக முன்வந்து அறிவிக்குமாறு அது வலியுறுத்தியுள்ளது.

கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை MOM இணையதளத்தில் காணலாம்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள்.!