சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள்.!

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் கட்டுமானம், கப்பல், சேவை போன்ற துறைகளிலேயே அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான செயற்பாடுகள், பிரச்சினைகள் போன்றவற்றை ஆராய மனிதவள அமைச்சகம் (MOM) செயல்படுகிறது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் ஊதிய குறைவு, ஆபத்தான லாரி பயணங்கள் போன்ற சில பொதுவான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றன அதுகுறித்து தற்போது பார்போம்.

ஊதிய குறைவு:

COVID-19 காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருகைதரும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், கட்டுமானம், கப்பல், சேவைத்துறை நிறுவனங்கள் ஊழியர் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இதனால், ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில முதலாளிகள் ஒப்பந்தப்படி கூறிய சம்பளத்தை முறையாக வழங்குவதில்லை என்றும், ஊழியர்கள் அதிகமாக வேலைக்கு உட்படுத்தப்பட்டாலும் முதலாளிகள் தகுந்த சம்பளம் வழங்குவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலையிடப் பாகுபாடு பிரச்சினையை குறித்து துணிந்து புகாரளிக்க வேண்டும்

முதலாளிகள் சமபளத்தை முறையாக வழங்க வேண்டும். சம்பளத்தை குறைவாக வழங்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேலை செய்யும் காலத்தை வரையறை செய்ய வேண்டும். கூடுதலாக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குரிய கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

லாரி பயணங்கள்

கட்டுமான துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை அவர்கள் தங்குமிடங்களில் இருந்து பணி இடங்களுக்கு அழைத்து செல்வதற்காக லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லாரி பயணங்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் பெருமளவு அபாயங்களை சந்திக்கின்றனர். விபத்துக்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால், லாரி பயணத்திற்கு ஊழியர்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்பு காணப்படுகின்றது.

“ஊழி­யர்­க­ளின் சம்பளத்தை உயர்த்த மொத்த சமூகத்தின் ஆதரவு அவசியம்”

லாரி பயணிகளுக்கு பதிலாக மாற்று வாகனமாக வேன் அல்லது பஸ் பயன்படுத்துவது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அண்மையில் பாராளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெற்றன.

இருப்பினும், சிறிய அளவிலான நிறுவனங்களின் முதலாளிகள் லாரி பயணத்திற்கு பதிலாக பேருந்துகளை பயன்படுத்துவது முடியாத காரணம் என தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களை கொண்டு செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பேருந்துகளை வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது என்றும், லாரிகள் பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்த முடியும் என தெரிவித்தனர்.