வேலையிடப் பாகுபாடு பிரச்சினையை குறித்து துணிந்து புகாரளிக்க வேண்டும்

Photo: Getty

சிறுபான்மையினர்களுக்கு ஏற்படும் வேலையிடப் பாகுபாடு பிரச்சினையை தீர்ப்பது மிகவும் சிரமமானது.

எனவே ஊழியர்கள் துணிந்து, வேலையிடங்களில் ஏற்படும்  பிரச்சினையை குறித்து புகார் அளிக்க வேண்டும் என முன்னாள் தேசியத் தாெழிற் சங்கக் காங்கிரஸ் துணைத் தலைவர் கார்த்திகேயன் (வயது 62) கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரி விபத்து: 5 பேர் காயம்.! (காணொளி)

ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் ஆலோசனைகள் வழங்குவதற்கும் அமைக்கப்பட்ட வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்பு வழிகாட்டுதல்கள் (டஃபெப்) நாளடைவில் ஊழியர்களின் சார்பாகவே அதிகம் செயல்பட ஆரம்பித்தது.

அரசு இந்த அமைப்பை மேன்மேலும் வலுப்படுத்தினால், வேலையிடப் பாகுபாடு போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதில் அதிக பயனளிக்கும்.

தற்போது டஃபெப் அமைப்பால் இனப்பாகுபாட்டுடன் இருக்கக்கூடிய வேலை விளம்பரங்கள் போன்ற செயலைத் தடுக்க இயலும்.

சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்பு கூட்டணி, தொழிற்சங்கங்கள் போன்றவர்களிடம், உதவி தேவைப்படும் ஊழியர்கள் உதவி பெறலாம் என யுனைடெட் வொர்க்கர்ஸ் ஆஃப் பெட்ரோலியம் இண்டஸ்ட்ரி நிர்வாகச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

வேலையிடங்களில் சமூக ஒன்றுகூடல் மற்றும் தொடர்புகளுக்கு மீண்டும் தடை