வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரி விபத்து: 5 பேர் காயம்.! (காணொளி)

car and lorry accident
Pic: shin min daily

சிங்கப்பூரில் உள்ள Cross Street, Cecil Street சந்திப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 05) பிற்பகலில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

காருடன் மோதிய வேகத்தில், லாரியின் பின்புறத்தில் இருந்த இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் சாலையின் கீழே விழுந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரி, காருடன் மோதிய பின்னர், லாரி ஓட்டுநர் அதைப் பின்னால் செலுத்தியதாகவும், சாலையில் விழுந்த ஊழியர்களில் ஒருவர் மீது லாரியை ஏற்றியதாகவும் விபத்தை பார்த்த 55 வயது ஆடவர், ஷின் மின் செய்தித்தாளிடம் கூறினார்.

லாரி பயணங்களால் ஆபத்துக்களை சந்திக்கும் ஊழியர்கள்: லாரிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

இதையடுத்து, லாரி ஏறியதில் காயமடைந்த அந்த வெளிநாட்டு ஊழியர் வலியில் துடிதுடித்து அலறினார் என்றும், நினைவிருந்தபோதும் அவரால் பேச முடியவில்லை என்றும் அந்த ஆடவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வரும்வரை, விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள், காரை விட்டு வெளியேறவில்லை என்றும், காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த இருந்த பயணியும் அதிர்ச்சியில் இருந்தது போல காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், காரை ஓட்டிச்சென்ற 58 வயது பெண், காரில் இருந்த 60 வயது பயணி மற்றும் 28, 34 வயதுடைய இரண்டு ஆடவர்கள் உள்ளிட்டோர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களையே அதிகம் சார்ந்திருக்கும் லிட்டில் இந்தியா