லாரி பயணங்களால் ஆபத்துக்களை சந்திக்கும் ஊழியர்கள்: லாரிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை அவர்கள் தங்குமிடங்களில் இருந்து பணி இடங்களுக்கு அழைத்து செல்வதற்காக லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லாரி பயணங்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் பெருமளவு அபாயங்களை சந்திக்கின்றனர். விபத்துக்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால், லாரி பயணத்திற்கு ஊழியர்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்பு காணப்படுகின்றது.

லாரி பயணிகளுக்கு பதிலாக மாற்று வாகனமாக வேன் அல்லது பஸ்கள் பயன்படுத்துவது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அண்மையில் பாராளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெற்றன.

குடும்ப வறுமையை போக்க வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்ற 200 தமிழர்கள் மரணம் – ரிப்போர்ட்

இருப்பினும், சிறிய அளவிலான நிறுவனங்களின் முதலாளிகள் லாரி பயணத்திற்கு பதிலாக பேருந்துகளை பயன்படுத்துவது முடியாத காரணம் என தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களை கொண்டு செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பேருந்துகளை வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது என்றும், லாரிகள் பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்:

  • ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளின் வேகம் மணிக்கு 30 கிலோமீட்டர் ஆக வரையறை செய்யப்பட்டுள்ளது.
  • ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரியின் பின்புறம் அமர்வதற்கான இருக்கைகள் இருக்க வேண்டும்.
  • லாரிகளின் பின்புறம், இருபுறங்களிலும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • லாரிகளில் பொருட்களுடன் சேர்த்து ஊழியர்களையும் ஏற்றிச் செல்லக்கூடாது.

மேற்கண்ட இந்த விதிமுறைகளை மீறும் லாரி ஓட்டுனர்கள் தண்டிக்கப்படுவர்.

விடுதிகளிலிருந்து எப்போது விடுதலை கிடைக்குமென வெளிநாட்டு ஊழியர்கள் ஏக்கம்!