குடும்ப வறுமையை போக்க வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்ற 200 தமிழர்கள் மரணம் – ரிப்போர்ட்

தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், அதற்காக கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு ஊழியர்கள் வேலைக்கு செல்கின்றனர்.

வாழ்வாதாரத்திற்காக சென்ற தமிழ்நாட்டு ஊழியர்கள் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக நியூஸ் 18 தமிழ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

விடுதிகளிலிருந்து எப்போது விடுதலை கிடைக்குமென வெளிநாட்டு ஊழியர்கள் ஏக்கம்!

இதுகுறித்த அறிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையம் கூறுகையில்; “2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை, வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்ற சுமார் 200 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு வந்தடைந்துள்ளது.”

அதாவது, ஒவ்வொரு ஆண்டுகளிலும், 48, 75, 77 முறையே உடல்கள் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

வேலைக்காக வெளிநாடு செல்வோர், அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முகவரி, தொடர்பு விவரங்களை தெரிந்துகொள்வது அவசியம் என்று ஆணையகம் அறிவுறுத்தி உள்ளது.

கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற வெளிநாட்டவருக்கு சிறை