விடுதிகளிலிருந்து எப்போது விடுதலை கிடைக்குமென வெளிநாட்டு ஊழியர்கள் ஏக்கம்!

migrant workers immigration-offenders
(Photo: Mothership)

கோவிட்-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து  கட்டுப்பாடு உத்தரவின்கீழ் தங்குவிடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தனிமையில் தவிப்பதாகவும், பலவித மனவுளைச்சலுக்கு ஆளாவதாகவும் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பொழுதுபோக்கு நிலையங்கள், வேலையிடம் ஆகியவற்றுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை விட, விடுதி அறைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த ஊழியர்களுக்கு அதிக மனவுளைச்சல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற வெளிநாட்டவருக்கு சிறை

யேல்-என்யுஎஸ் சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஜீன் லியூ நடத்திய ஆய்வுக் குழு, “காேவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடு உத்தரவு உதவினாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரத்துள்ளது,” என குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, 2 தங்குவிடுதிகளை தனிமைப்படுத்தும் இடங்களாக அரசாங்கம் அறிவித்ததால், அங்கிருந்த சுமார் 20,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி, விடுதிகளில் வசிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டதால் விடுதி அறைகளைவிட்டு வெளியே செல்ல ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெரும்பாலான தங்குவிடுதிகளில் கிருமித்தொற்றுப் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டாலும், ஊழியர்களின் நடமாட்டத்திற்கு இன்னமும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

வேலைக்குச் சென்று தங்குவிடுதிக்கு அவர்கள் திரும்ப வேண்டும். ஓய்வு நாள்களில் ஒரு சில பொழுதுபோக்கு நிலையங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் நீண்ட காலமாக சாெந்த நாட்டில் இருக்கும் தன் குடும்பத்தினரைக் காண ஆவலாக இருந்தாலும், சொந்தநாட்டிற்கு சென்றபின் மீண்டும் சிங்கப்பூர் திரும்பி வர முடியாமல் போய்விடுமோ என்று கவலைக் கொள்கின்றனர்.

இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள், தாங்களும் காேவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் சாெந்த நாட்டிற்குச் சென்று உறவுகளைக் கண்டு மகிழ வேண்டும். தம் நண்பர்களைச் சந்தித்து சந்தாேஷம் அடையும் நாளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், தங்கு விடுதியில் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக பதிவு – போலீஸ் விசாரணை