சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக பதிவு – போலீஸ் விசாரணை

(Photo: Ernest Chua)

இனம் சார்ந்தவர்களிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் மலாய் இனத்தைச் சேர்ந்த 27 வயதான சிங்கப்பூர் பெண் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொட்டித் தீர்த்த கனமழை: 1980க்குப் பிறகு கடந்த ஆகஸ்டில் அதிக மழை பதிவு

கடந்த மாதம் ஆகஸ்ட் 29 அன்று, அவர் மலாய் சமூகத்திற்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டதாக கூறப்படுகிறது, இது தொடர்பான புகாரை காவல்துறை பெற்றுள்ளது.

விசாரணைகளின் மூலம், அதே நாளில் அந்த பெண்ணின் அடையாளத்தை காவல்துறை கண்டறிந்தனர்.

“சிங்கப்பூரில், எங்களுக்கு மலாய்க்காரர்களை பிடிக்காது…” என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும், தகாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

பல்வேறு இன குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவிக்கும் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற வெளிநாட்டவருக்கு சிறை