சிங்கப்பூரில் கொட்டித் தீர்த்த கனமழை: 1980க்குப் பிறகு கடந்த ஆகஸ்டில் அதிக மழை பதிவு

Singapore Laughs/Facebook

சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக மழை பெய்துள்ளதாகவும், கடந்த 41 ஆண்டுகளில் இதுவே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சிங்கப்பூரில் பெய்த மொத்த மழையின் அளவு 426.2மிமீ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற வெளிநாட்டவருக்கு சிறை

1996ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் பெய்த 296.3மிமீ மழையின் அளவை அது கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2021ல், சிங்கப்பூர் முழுவதும் மழைப்பொழிவு சராசரியை விட அதிகமாகவே இருந்தது.

வடக்கு மற்றும் மேற்கு சிங்கப்பூரில் அதிக மழை பெய்ததாக வானிலை ஆய்வகம் கூறியுள்ளது.

சராசரியை விட வழக்கத்திற்கு மாறாக புக்கிட் பஞ்சாங்கில் 240 சதவிகிதம் மழை பதிவானது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், அதிகபட்ச தினசரி மொத்த மழையின் அளவு 247.2 மிமீ பதிவானது.

சிங்கப்பூரில் கனமழை – தோ பாயோவில் மொத்தம் 100மிமீ மழை பதிவு

இந்தியப் பெருங்கடலில் வானிலை தாக்கம்… சிங்கப்பூரில் அடுத்த 2 மாதங்களில் கனமழை பெய்யக்கூடும்

ஆகஸ்டில் ஒட்டுமொத்தமாக பெய்ய வேண்டிய மழை… ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது!

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?